Breaking News

10ம் தேதி புயல் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே10ஆம் தேதி புதிய புயல் உருவாகிறது என்றும், அந்த புயலுக்கு மோச்சா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் உருவாகி வங்க தேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback