Breaking News

10, 11, 12 ம் வகுப்பு தேர்வு TIME TABLE முழு விவரம்!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 வெளியானது அதில் தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அதுபோல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அன்று மதியம்  வெளியானது அதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில், 10, 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மே 23 ஆம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதே போல் தமிழ்நாட்டில் மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 08 ம் தேதி வெளியிடப்பட்டன. 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர்.பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி உடனடி சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை




11 ம் வகுப்பு தேர்வு அட்டவணை

12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை




Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback