ஆன்லைன் சூதாட்டம் தண்டனைகள் என்ன, அபராதம் எவ்வளவு முழு விவரம் online gaming ban | online games ban
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியானது. அடுத்த கட்டமாக ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்படும். ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்கள் மீதான புகாரை விளையாட்டு ஆணையம் தீர்த்து வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரம்:-
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை!
விளையாட்டில் ஈடுபட்டால் 3 மாதம் சிறை, அல்லது 5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்!
சூதாட்டத்தை விளம்பரம் செய்பவர்களுக்கு 1 ஆண்டு சிறை, அல்லது 75 லட்சம் அபராதம் அல்லது 2ம் சேர்த்து விதிக்கப்படும்!
சூதாட்ட விளையாட்டுகளை வழங்குவோருக்கு 3 ஆண்டு சிறை அல்லது 10 லட்சம் அபராதம் அல்லது 2ம் சேர்த்து விதிக்கப்படும்
5 அதே நிறுவனம் மீண்டும் தவறு இழைத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 720 லட்சம் அபராதம் விதிக்கப்படும்!
Tags: தமிழக செய்திகள்