Breaking News

பேருந்து பின்புறம் கண்ணாடி கீழே விழுந்து விபத்து பேருந்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

குஜராத் ஜாம்நகர் பகுதியில், வேகத்தடையில் ஏறி இறங்கிய அரசுப் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்ததில் பஸ் பின்புறம் இருந்த  மாணவர்கள் கீழே விழுந்தார்கள் இதில் பேருந்து பின்புறம் எந்த வாகனமும் வராததால் மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

குஜராத் ஜாம் நகர் பகுதியில் நேற்று மதியம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணித்து கல்லூரிக்குச் சென்ற இரு மாணவர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்ததால் கீழே விழுந்தார்கள் இந்த சம்பவத்தின் வீடியோ அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் பேருந்து சாலையில் உள்ள ஸ்பீட் பிரேக்கரை கடக்கும் போது ஓடும் பேருந்தின் கண்ணாடி உடைந்து பேருந்தில் இருந்த மாணவர்கள் கீழே விழுந்துள்ளார்கள், அந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் குனாட் கிராமத்தில் வசிக்கும் பிகல் துஷயத்சிங் பிரதாப் சிங் (20) மற்றும் கேரி கிராமத்தைச் சேர்ந்த ஜடேஜா ஹர்தீப்சிங் பபுபா (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடனடியாக, அவர்கள் சிகிச்சைக்காக ஜிஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


வீடியோ பார்க்க:-

https://twitter.com/TheUPNews/status/1649264505153634304

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback