Breaking News

எச்சரிக்கை யூடியூப் வீடியோவை லைக் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என புதிய மோசடி

அட்மின் மீடியா
0
இந்த இணைய உலகில் நாள்தோறும் பல மோசடிகள் நடந்து கொண்டுதான் உள்ளது, மேலும் இண்டர்நெட் வந்த பிறகு புதுப்புது சைபர் மோசடிகள் அறங்கேறுகின்றது சைபர் க்ரைம் மோசடிகளின் வரிசையில் புதிதாக யூடியூப் வீடியோவை `லைக்' செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் கும்பல் பற்றிய செய்திதான் தற்போது பார்க்க உள்ளோம்

டெல்லியில் உள்ள குருகிராமில் வசிக்கும் சிம்ரன்ஜீத் சிங் நந்தா என்ற பெண் சில யூடியூப் வீடியோக்களை லைக் செய்து பணம் சம்பாதிப்பதற்காக ஆசைப்பட்டு மோசடி செய்பவர்களால் ஏமாற்றப்பட்டு ரூ. 8.5 லட்சத்தை இழந்ததாக பிடிஐ அறிக்கை வெளிப்படுத்துகிறது. 

மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரை அணுகி ஒவ்வொரு லைக்கிற்கும் 50 ரூபாய் தருவதாகக் கூறியதை நம்பி அவரும் ஆரம்பித்துள்ளார், ஆரம்பத்தில் தினசரி 10 வீடியோக்களுக்கு லைக் போட்டு சம்பாதித்த நந்தா பேராசை பட்டுள்ளார் தொடக்கத்தில், மோசடி செய்பவர்கள் முதலில் மக்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து, பின்னர் அவர்களிடம் சிக்க வைத்து அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பார்கள்,அவர்களிடம் அடுத்த அடுத்த லெவல் போக பணம் கட்டினார்  முடிவில் அவரது பணம்  முழுவதுமாக ஏமாந்துள்ளார்

வாட்ஸ்அப்பில் பார்ட் டைம் ஜாப் என குறுந்தகவல் அனுப்புவார்கள். என்ன வேலை எனரிப்ளை செய்தால் யூடியூப் வீடியோவை லைக் செய்வது என பதில் தருவார்கள் உடனே நாம் லைக் செய்தால் பணம் வருமே, என நினைத்து ஒப்புக்கொள்வோம். அதன்படி ஆரம்பத்தில் அவர்களின் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் உடனடியாக பணம் வரும். இதையடுத்து அவர்கள் நம்மை டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள். 

அடுத்து அதில் பல நிலைகள் இருக்கும். அத்ற்க்கு ஒவ்வொரு நிலைக்கும் பணம் கட்டவேண்டும் என இருக்கும்நீங்கள் ஆரம்பத்தில் முதல்நிலை படியை தேர்வு செய்து கொஞ்சம் பணம் கட்டுவீர்கள் அதன் பின்பு அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை முடித்து  உங்கள் முதலீடு செய்தபணம் போக 30 முதல் 60 சதவீதம் வரை கமிஷனாக நமக்கு கிடைத்துவிடும். 

அதன்பின்பு உங்கள் மனம் பேராசை பட்டு அடுத்த அடுத்த நிலைக்கு பணம் கட்டி செல்வீர்கள் ஒரு கட்டத்தில் உங்கள் அக்கவுன்ட் முடங்கிவிட்டது. பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வர வேண்டிய ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும் என பதில் அளிப்பார்கள்.அல்லது உங்கள் பணியை தவறாகச் செய்து முடித்து விட்டீர்கள். இதனால், உங்கள்குழு நண்பர்கள் அனைவருக்கும் உங்கள் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவார்கள்.  எனவே பொதுமக்கள் முன்பின் தெரியாத நபர்கள் சொல்வதை நம்பி எந்த வெப்சைட்டிலும் பணத்தை கட்ட வேண்டாம் என்று அட்மின் மீடியா சார்பாக கேட்டு கொள்கின்றோம்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback