Breaking News

நீதிமன்றத்தில் சரன் அடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் அதிரடியாக கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2016 ம் ஆண்டு ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிட்டார் அப்போது  ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகி பெரிய சர்ச்சையானது.இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் ஆனால் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்  இவ்விவகாரத்தை பேசாமல் இருக்க டிரம்ப் அவருக்கு ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில், சட்ட ரீதியிலான செலவு என குறிப்பிடப்பட்டதால் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். 

மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 4 ம் தேதி  தொடரும் என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து, நீதிமன்றத்திலிருந்து ட்ரம்ப் வெளியேறினார்.அமெரிக்க வரலாற்றில், கிரிமினல் வழக்கில் முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback