Breaking News

இனி திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அனுமதி பெற்று மது அருந்தலாம் - தமிழக அரசு அரசானை

அட்மின் மீடியா
0

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம்.

இதற்க்காக அந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது

சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மதுபானம் வழங்க அனுமதி இருந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்:-

இந்த மதுபான அனுமதி குறித்து தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகள், சர்வதேச மாநாடுகளில் மட்டுமே மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி என்று விளக்கம் அளித்துள்ளார்.

திருமணம் போன்ற ஒருநாள் நிகழ்வுகளில் அரசு அனுமதியுடன் மதுபானம் பயன்படுத்தலாம் என்ற தகவலில் உண்மையில்லை என்றும், திருமண நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்த அரசு ஒருபோதும் அனுமதி தராது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டார். 

இந்த சர்வதேச நிகழ்வுகளில் மதுபான அனுமதி என்பதும், மற்ற மாநிலங்களில் உள்ளது போல நிபந்தனைகளை பின்பற்றி தான் தமிழகத்திலும் இந்த மதுபான அனுமதி செய்லபடுத்தப்பட உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

கட்டணம்:-

ஒருநாள் அனுமதிபெற மாநகராட்சியில் 11,000, 

நகராட்சியில் 7,500, 

பிறபகுதிகளில் 5,000 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளத



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback