Breaking News

கர்நாடகாவில் 4% இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து – இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4% இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9 வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது

 

 

கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு கர்நாடகாவில் பல ஆண்டுகளாக அமலில் உள்ள நிலையில் இஸ்லாமிய மக்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக பாஜக அரசு அறிவித்திருந்ததது.கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மே 9-ம் தேதி வரை இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மே 9 வரை கர்நாடக அரசின் முடிவை அமல்படுத்த கூடாது என்றும் தெரிவித்தனர். இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கர்நாடக அரசும் இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை என்று உறுதியளித்தது.

தற்போது கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4% இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9 வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback