Breaking News

ஓடும் ரயிலில் 3 பேரை எரித்து கொன்றது ஏன் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்த கொலைகாரன்

அட்மின் மீடியா
0

கேரளாவில் ஓடும் ரயிலில் பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆழப்புழாவிலிருந்து ஏப்ரல் 2ஆம் தேதி மதியம் 2.55 மணிக்கு கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9:30 மணியளவில் கோழிக்கோடு  எலத்தூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது,  ரயிலில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சக பயணிகள் மீது கையில் இருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை தெளித்து  தீ வைத்துள்ளார். 



அவரது செயலை சற்றும் எதிர்பார்த்திராத மற்ற பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பயணிகள் மீது தீ வைத்த அந்த மர்ம நபர், ஓரும் ரயில் இருந்து கீழே குதித்து அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.இதனை பார்த்த ரயில் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 பேர் இறந்துள்ளார்கள் எனவும் முதல்கட்ட விசாரனையில் தெரிய வந்தது உயிரிழந்தவர்கள் ரஹ்மத் மற்றும் அவரது தங்கை ஜசீலா மற்றும் அவரது ஒரு வயது குழந்தை என்றும் தீ காயத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்ள, ரயிலில் இருந்து குதித்தத்தாகக் கூறப்படுகிறது. 3 பேர்களின் உடல் எலத்தூர் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது ,உயிரிழந்த மூவரும் கண்ணூர் மட்டன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் எலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தீக்காயம் அடைந்த பயணிகளை கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து கண்ணூருக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், சக பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர் குறித்த உருவப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டிள்ளார்கள் பயணிகள் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் குற்றவாளியின் கம்ப்யூட்டர் வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது.  

மேலும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குற்றவாளியைப் பிடிக்க ஏ.டி.ஜி.பி அஜித்குமார் தலைமையில் 18 பேர்கொண்ட விசாரணை டீம் அமைக்கப்பட்டுள்ளது ரயிலில் இருந்து தப்பியோடிய நபரின் செல்போனை ஆய்வு செய்ததில்  அந்த மர்ம நபர் உபி மாநிலம் டெல்லி அருகே நொய்டாவை சேர்ந்த ஷாருக் சைஃபி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷாருக் செய்பியின் செல்போனை வைத்து நடத்திய விசாரணையில் அவன் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் இருப்பது தெரியவந்தது அதனை அடுத்து மும்பை போலீசாருக்கு தகவல் அனுப்பி போலிசார் அவனை கைது செய்தனர். 

கேரள போலீசார் இன்று ஷாருக் செய்பியை கோழிக்கோட்டுக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். இந்த விசாரணையில் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று ஒருவர் கூறியதால் தான் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக ஷாருக் செய்பி போலீசிடம் வாக்குமூலம் அளித்து உள்ளான். மேற்கொண்டு போலிசார் விசாரனை நடத்தி வருகின்றார்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback