Breaking News

காபாவில் 27ம் நாள் நடைபெற்ற தொழுகை புகைப்படங்கள்

அட்மின் மீடியா
0

 காபாவில் 27ம் நாள் தொழுகை புகைப்படங்கள்



லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது. அதற்க்கு காரணம் ரமளான் மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது  அந்த இரவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் வரும் ஒற்றையான இரவுகளில் (21,23,25,27 மற்றும் 29வது இரவுகளில் )அமைந்திருக்கும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். 


லைலத்துர் கத்ர் என்பது 27 வது இரவு மட்டுமே என்கின்ற தவறான கருத்து  பலரிடம் உள்ளது ஆனால் 

எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! 

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

அப்படிபட்ட ஒற்றை படை 27 வது இரவில் புனித காபாவில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் விடிய விடிய பிரார்த்தனை மேற்கொண்டனர்.


இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் கடந்த மார்ச் 23ம் தேதி பிறை தென்படாததால் மார்ச் 24ம் தேதி முதல் நோன்பு தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூப் அறிவித்தார்.

 இதனைத் தொடர்ந்து ரமலான் நோன்பு தொடங்கி நேற்றுடன் 26 நோன்புகள் நிறைவடைந்துள்ளது.ரமலான் மாதத்தின் 29வது தினத்தில் மீண்டும் பிறை பார்க்கப்படும். பிறை தென்பட்டால் வரும் சனிக்கிழமை ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாக கணக்கிடப்பட்டு, அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஒருவேளை பிறை தெரியவில்லை எனில் வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.


புகைப்படங்களுக்கு நன்றி

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback