Breaking News

கர்நாடக தேர்தலில் ஒவைசி கட்சி 25 இடங்களில் போட்டி Karnataka election Owaisi led AIMIM to field 25 candidates

அட்மின் மீடியா
0

அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி சுமார் 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தல் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஒஸ்மான் கானி தெரிவித்துள்ளார்


2018 தேர்தல்:-

224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை 2018 ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 110 இடங்களில் பாஜக, 78 இடங்களில் காங்கிரஸ்,ஜனதாதளம் 37 இடங்களில் வெற்றி பெற்றது, 110 இடங்களில் வென்ற பா.ஜ.க. 6 சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.  எடியூரப்பா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 

சட்டமன்ற வாக்கெடுப்பில் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. பொறுப்பேற்ற 3 நாளில் ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 

அதன்பின்பு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டனி அமைத்து  குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார் ஆனால் 14 மாதத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் பாஜக  பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சியமைத்தது.

2023 தேர்தல்:-

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 13 வேட்பு மனு தாக்கல்

ஏப்ரல் 20 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்

ஏப்ரல் 21 வேட்புமனு பரிசீலனை 

ஏப்ரல் 24 மனு திரும்ப பெற கடைசி நாள் 

மே 10ம் தேதி வாக்குப்பதிவு

மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்

கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. 

அதேபோல் காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை பிடித்து மீண்டும் ஆட்சி அரியணையில் அமர தீவிர தேர்தல் பிராசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிபாடுதான் தேர்தல் அறிவிக்கும் முன்னரே வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது என்றே சொல்லலாம்


அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் All India Majlis-e-Ittehadul Muslimeen AIMIM 

ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி தனது கட்சி கர்நாடக தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டணியா அல்லது தனித்து போட்டியிடுவோமா என்பதற்கு கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்' என்றார்  3 தொகுதிகளுக்கன வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளது 

கடந்த 2018 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜேடிஎஸ் கட்சிக்கு ஓவைசியின் ஏஐ.எம்.ஐ.எம் கட்சி ஆதரவு அளித்தது. ஆனால் இந்த முறை அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஒவைசி கட்சி விரும்புகின்றது என்றே கூறலாம் 3 தொகுதிகளுக்கன வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி

பெலகாவி வடக்கு தொகுதியில் லதீப் கான் பதான், 

ஹூப்ளி தார்வாட் கிழக்கு தொகுதியில் துர்கப்பா பிஜ்வாட், 

பசவண்ணா பாகேவாடி தொகுதியில் அல்லாபக் ஷ் பிஜாப்பூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இந்த மூன்று வேட்பாளர்களில் ஒருவர் இந்து மதத்தை சேர்ந்தவர். ஏஐஎம்ஐஎம் முஸ்லிம் கட்சி என சொல்லப்பட்டாலும், நாங்கள் இந்துக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருகிறோம். என ஒவைசி கூறியுள்ளார்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback