Breaking News

upi ல் இருந்து 2000 க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணமா? உண்மை என்ன? முழுவிவரங்கள் தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0

upi ல் இருந்து 2000 க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணமா? உண்மை என்ன? முழுவிவரங்கள் தெரிந்து கொள்ள



இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே Google Pay, Phone Pay, Paytm, Amazon Pay போன்ற UPI app-க்களை பயன்படுத்தி வருகின்றனர். 

யூபிஜ என்றால் என்ன:- 

பண பரிவர்த்தனையில் வங்கியில் மட்டுமே வங்கி திறந்து இருக்கும் போது மட்டுமே தான் நாம் பணத்தை மற்றவர்களுக்கு செலான் மூலம் அனுப்ப முடிந்தது இந்நிலையில் வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் UPI ஆகும். 

யுபிஐ ல் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் பணத்தை செலுத்த முடியும். யுபிஐ ஏற்கனவே உள்ள IMPS எனும் தொழில்நுட்பத்தை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது. யுபிஐ மூலம் பணம் அனுப்ப இதுவரை எந்த வித கட்டணமும் கிடையாது இந்தியாவில் யுபிஐ சேவை வசதி 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

அதன்படி மொபைலில் யுபிஐ வசதி மூலம் கட்டணமின்றி பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. UPI விரிவாக்கம்  Unified Payments Interface தமிழில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு ஆகும்

NPCI  என்றால் என்ன:-

பணப்பரிவர்த்தனை செய்வதற்க்கான இந்த யூபிஜயை  NPCI (National Payments Corporation of India) எனும் அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. NPCI இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஆகும் 

யூபிஜ மூலம் தற்போது பணம் அனுப்ப  கூகுள் பே, பேடிஎம், போன் பே, அமேசான் பே, பாரத்பே, மற்றும் தற்போது அனைத்து வங்கிகளும் யூபிஜ வசதியை கொண்டு வந்துள்ளது மேலும் பெரும்பாலான மக்கள் அதிகளவில் இன்று யூபிஜயை பயன்படுத்தி வருகின்றனர்.நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது 

2000 ரூபாய்க்கு மேல் கட்டணமா:-

இந்நிலையில் இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியானது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள  ஒரு சுற்றறிக்கையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) வணிக பரிவர்த்தனைகளுக்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) கட்டணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. என தகவல்கள் வெளியானது.  

அதாவது டிஜிட்டல் வாலட்டுகளில் இருந்து யுபிஐ மூலம் ரூ.2,000க்கு மேல் வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் வாலட் என்றால் என்ன:-

டிஜிட்டல் வாலட் என்றால், நம் பணத்தை நமது பேங்கிலிருந்து அல்லது ஏடிஎம் கார்டில் இருந்து நம் டிஜிட்டல் மாற்றிக்கொண்டு, அதன் மூலம் நமக்குத் தேவையான அன்றாட பணத்தேவைகளை அதிலிருந்து செலுத்துவது.

அதாவது சுருக்கமாக சொன்னால் நாம் சேமித்து வைக்கும் உண்டியல் போல் ஆகும்

டிஜிட்டல் பணப்பைகள் உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும்போது பணம் செலுத்த உங்களை அனுமதிக்கின்றன, இதனால் உங்கள் கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கிக் கணக்குத் தகவலை உள்ளிட்டு சேமித்து வைத்து, வாங்குவதற்குப் பணம் செலுத்த உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

யூபிஜ முற்றிலும் இலவசம் தான்

வணிக ரீதியாக 2000 ரூபாய்க்கு மேல் கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ சேவை மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் என்ற நிலையில் யூபிஜ சேவை முற்றிலும் இலவசம் என்று NPCI விளக்கம்  அளித்துள்ளது 

வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு யுபிஐ வழியாக பணம் அனுப்பவது இலவசம் தான். எனவே யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். என NPCI  விளக்கம் அளித்தது




          

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

சமீபத்திய காலங்களில், இலவச, வேகமான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குவதன் மூலம் UPI டிஜிட்டல் கட்டணத்தின் விருப்பமான முறையாக உருவெடுத்துள்ளது. பாரம்பரியமாக, UPI பரிவர்த்தனைகளின் மிகவும் விருப்பமான முறையானது, மொத்த UPI பரிவர்த்தனைகளில் 99.9%க்கும் அதிகமான பங்களிப்பை செலுத்துவதற்காக, UPI செயல்படுத்தப்பட்ட பயன்பாட்டில் வங்கிக் கணக்கை இணைப்பதாகும். இந்த வங்கி கணக்கிலிருந்து கணக்கு பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு தொடர்ந்து இலவசமாக இருக்கும். சமீபத்திய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள், ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்கள் (பிபிஐ வாலட்ஸ்) ஒன்றோடொன்று இயங்கக்கூடிய UPI சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. 

இதைக் கருத்தில் கொண்டு NPCI இப்போது PPI வாலட்களை இயங்கக்கூடிய UPI சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க அனுமதித்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட பரிமாற்றக் கட்டணங்கள் பிபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை, 

மேலும் வங்கிக் கணக்கிலிருந்து வங்கிக் கணக்கு அடிப்படையிலான UPI கட்டணங்கள் (அதாவது சாதாரண UPI கொடுப்பனவுகள்) ஆகியவற்றிற்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்த UPI உடன், வாடிக்கையாளர்கள் எந்த வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம், ஒருவர் நேரடியாக தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. 

மொபைல் வாலட் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே  கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களும் வியாபாரிகளிடம் வசூலிக்கப்படுமே தவிர, வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படாது என தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தெளிவுபடுத்தியுள்ளது. 

அதிகாரபூர்வ அறிவிப்பு:- https://twitter.com/NPCI_NPCI/status/1640964585267281926

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback