Breaking News

TNPSC Group 4 Result 2023 எப்படி பார்ப்பது? TNPSC Group 4 Cut Off Marks 2023 எப்படி தெரிந்து கொள்வது

அட்மின் மீடியா
0

TNPSC Group 4 Result 2023 எப்படி பார்ப்பது?  TNPSC Group 4 Cut Off Marks 2023 எப்படி தெரிந்து கொள்வது


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7, 301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7, 689 மையங்களில் கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படைக் கல்வித் தகுதியாகக் கொண்ட இந்த தேர்வில் 18. 36 லட்சம் பேர் பங்கேற்றனர். மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7, 301-ல்இருந்து 10, 117-ஆக உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த குருப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது



தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது.சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.இந்த தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

தேர்வர்கள் கீழ் உள்ள அதிகாரபூர்வ லின்ங்கில் சென்று உங்கள் ரிஜிஸ்டர் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு உங்கள் முடிவுகளை பார்க்கலாம்

தேர்வு எழுதியவர்கள் தேர்வு  முடிவுகளை பார்க்க:-

https://www.tnpsc.gov.in/


கட் ஆப் பார்ப்பது எப்படி:-

கிராம நிர்வாக அலுவலர் பணியில் 425 காலியிடங்களும், 

இளநிலை உதவியாளர் பணிகளில் 5,102 பணியிடகளும், 

வரித் தண்டலர் அடங்கிய பணிகளில் 69 பணியிடங்களும், 

தட்டச்சர் (Typist) பணியில் 3,314 காலி இடங்களும், 

சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியில் 1,186 காலி இடங்களும், 

பண்டக காப்பாளர் (Store keeper) பணியில் 1 இடமும் நிரப்பப்பட உள்ளன

மொத்த மதிப்பெண் 300-க்கு, 175-க்கு மேல் எடுத்தவர்களுக்கு வேலை நிச்சயம் என்று கூறலாம்

இடஒதுக்கீடு அடிப்படையில் 

இடஒதுக்கீடு முறையின் கீழ், அறிவிக்கப்பட்ட காலியிடங்களில்

1% பழங்குடியினர் பிரிவுக்கும், 

15% ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், 

3% ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவினருக்கும், 

26.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்(முஸ்லீம் அல்லாதோர்), 

3.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்க்கும், 

20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினருக்கும் வழங்கப்படுகிறது. 

மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 1100 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை உறுதி. 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 990 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். 

பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவில் 150 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 700 தரவரிசைக்குள் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 

அருந்ததியர் பிரிவில் 200 தரவரிசைக்குள் இருந்தால் வேலை கிடைக்கும். 

பழங்குடியினர் பிரிவில் 60 ரேங்கிற்குள் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். என உத்தேசமாக கூறலாம்

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback