Breaking News

தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை - தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு | ramadan start 2023

அட்மின் மீடியா
0

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் நோன்பு ஆகும் ரமலான் நோன்பு صوم‎‎ என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். 

இந்த ரமலான் மாதத்தில் தான் அவர்களுக்கு அவர்களின் புனித அல் குரான் வேதம் அருளப்பட்டது எனவே அந்நாட்களில் நோன்பு இருப்பார்கள்

அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், இருப்பார்கள்.


ரமலான் மாதத்தின் முதல் பிறை  தமிழகத்தில் இன்று பிறை  எங்கும் தெரியவில்லை  

இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  24 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை ரமலான் நோன்பு தொடங்குகிறது என்று அரசு  தலைமை காஜி அறிவித்துள்ளார்கள்  என  ஜமாஅத்துல் உலமா சபை அறிவித்துள்ளது

கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இது குறித்து ஜமா அத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

இன்று 22.03.2023 அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலும் ரமலான் பிறை காணப்படவில்லை. ஆதலால் நாளை 23.03.2023 ஷஃபான் பிறை 30 வது நாள் ஆகும் என தமிழக அரசு தலைமை காஜி ஸாஹிப் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.


நோன்பு:-

நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு  சாப்பிடுவதோடு சரி, அதன் பின்னர் சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குபடி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள்

நோன்பு நேரத்தில் உணவு உண்ணாமல், நீர் பருகாமல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். அதன்பிறகு மாலை நோன்பு கஞ்சி சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள். 

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback