Breaking News

அஞ்சல்துறை வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு முடிவுகள் வெளியாகி உள்ளது ரிசல்ட் செக் செய்வது எப்படி? India Post GDS Result 2023

அட்மின் மீடியா
0

அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது ரிசல்ட் செக் செய்வது எப்படி?

தமிழக அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான Gramin Dak Sevaks பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது 

அதன்படி அஞ்சல் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியானது.அதில், தமிழ்நாட்டில் மொத்தம் 3,164 தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தேர்வானவர்கள் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்பட்டுள்ளது

முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?

விண்ணப்பித்தவர்கள் indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

அதில் Shortlist candidates என்பதை செலக்ட் செய்து அதில்  தமிழ்நாடு என்பதை தேர்ந்தெடுங்கள்

அடுத்து அதில் உள்ள short listed candidates பெயர் பட்டியல் திரையில் தோன்றும். அதில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள்

மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

http://indiapostgdsonline.cept.gov.in/HomePages/DocVerifyList_1/Tamilnadu_DV_List1.pdf

http://indiapostgdsonline.cept.gov.in/HomePages/D19.aspx#

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback