Breaking News

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி விபத்தில் சிக்கிய சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கிருஷ்ணகிரி ஓசூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிரே உள்ள வாகனங்களில் மோதி விபத்தில் சிக்கிய வீடியோ 



ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அது சாலைக்கு நடுவே இருந்த தடுப்புகள் மீது ஏறி அதை முறித்துக் கொண்டு சர்வீஸ் சாலைக்குள் புகுந்து, இதில் முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவை மீது லாரி மோதி சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியம் தடுப்பு இடிந்தது. இந்த விபத்து காட்சிகள் முன்னே சென்று கொண்டிருந்த மினி பேருந்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. டிப்பர் லாரியை இயக்கிய ஓட்டுநருக்குக் கால் முறிவு மட்டும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/R_ThiruChandar/status/1639526584247025667/video/v

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback