Breaking News

ரமலான் பிறை தகவல் தெரிவிக்க காஜிக்களின் தொடர்பு எண்கள் | ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


வரும் 22.03.2023 புதன்கிழமை அன்று ரமலான் பிறை பார்க்க வேண்டும். 

தங்கள் பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட பிறை பார்க்கப்பட்ட தகவல் இருந்தால் நம் சபையின் பிறைக்கான மாநில பிரதிநிதிகளான 
மௌலவி, K.M. செய்யது அபுதாஹிர் சிராஜி ஹழ்ரத் (9444494628) 

மௌலவி, M. சையது மஸ்வூது ஜமாலி ஹழ்ரத் (9444119195)

ஆகியோரிடம் உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். அவர்கள் தமிழக அரசின் தலைமை காஜி அவர்களுடன் கலந்து பேசுவார்கள்.

மேலும் தலைமை காஜி அவர்களின் இறுதியான முடிவு அனைவருக்கும் தாமதமின்றி தெரிவிக்கப்படும். பிறை விஷயத்தில் குழப்பம் செய்ய நினைப்பவர்களின் வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.

ஸதகத்துல் ஃபித்ரு விபரம் :-
ஹனபி :

1கிலோ 633 கிராம் கோதுமை, அல்லது அதற்கான கிரயம். இவ்வாண்டு அதன் கிரயம் ரூபாய் 90/- என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஷாபிஈ:

2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி. பொருளாக மட்டும் கொடுக்க வேண்டும். கிரயம் கொடுக்கக் கூடாது.

இதைவிட கூடுதலாக வரும் அறிவிப்புகள் பேணுதல் அடிப்படையில் கூறப்படுபவை ஆகும்.

இப்படிக்கு

தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை


Give Us Your Feedback