Breaking News

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் | மக்களவை செயலகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக  ராகுல்காந்தி உள்ளார் 


எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது  என ராகுல் காந்தி 2019 ம் ஆண்டு கர்நாடகாவில் பேசியிருந்தார். 

அதனை எதிர்த்து குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்  இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

மேலும் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து  மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது

இந்நிலையில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக  ராகுல்காந்தி உள்ளார் 

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது

தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback