Breaking News

கண்காட்சியில் திடிரென ராட்டினம் விழுந்து விபத்து உயிர்தப்பிய குழந்தைகள் வீடியோ

அட்மின் மீடியா
0

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் நடந்த கண்காட்சி ஒன்றில், திடீரென டிராப் டவர் சவாரியின் கேபிள் உடைந்து விபத்து; இதில் 11 பேர் படுகாயமடைந்தனர்



ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ராட்சத ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

அஜ்மீரில்  நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் செங்குத்தான மேலெழும்பும் ராட்டினம் ஒன்று உயரத்திற்குச் சென்றது. பின்னர் கீழே வரும்போது அதன் கேபிள் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதையடுத்து ராட்டினத்தில் சவாரி செய்தவர்கள் அலறினர். சுற்றியிருந்தவர்கள் வேகமாக சென்று அவர்களுக்கு உதவினர்இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியோடு ஜேஎல்என் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

வைரல் வீடியோ:-

https://twitter.com/sirajnoorani/status/1638219171350872065

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback