போலி டாக்டா் பட்டம் நடந்தது என்ன அண்ணா பல்கலை துணை வேந்தர் விளக்கம்
நடிகா் வடிவேலு உள்ளிட்ட 40 பேருக்கு போலி கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை இது தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பல்கலை. துணை வேந்தா் ஆா்.வேல்ராஜ் விளக்கமளித்துள்ளாா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கம் அரசுத் துறைகள், அரசுடன் இணைந்து செயல்படும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் மாணவா்கள் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.அந்த வகையில் சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் எனும் தனியாா்அமைப்பு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக அண்ணா பல்கலை. அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி விவேகானந்தா் அரங்கத்தில் கடந்த பிப்.26-ஆம் தேதி நடைபெற்ற விருது விழாவில் இசையமைப்பாளா் தேவா, நடிகா் வடிவேலு, நடிகா் கோகுல், நடன இயக்குநா் சாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் ஈரோடு மகேஷ் உள்பட 40 பேருக்கு கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகம் தான் இந்த விருது வழங்கியது போல் செய்தி பரவியது
இது குறித்து சென்னையில் அண்ணா பல்கலை. துணைவேந்தா் வேல்ராஜ் செய்தியாளா்களிடம்
அண்ணா பல்கலைகழகம் சார்பில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியையும் அண்ணா பல்கலைகழகத்தையும் ஏமாற்றியுள்ளனர். தனியார் நிறுவன பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைகழக அரங்கத்தை பயன்படுத்தியுள்ளனர்.
புனிதமான அண்ணா பல்கலைகழகத்தில் இது போன்ற தவறான செயல் நடந்ததற்கு வருந்துகிறோம்.இது குறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் ஆளுனரின் செயலாளர், உயர்கல்வித்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இனி அண்ணா பல்கலைகழக அரங்கை வாடகைக்கு விடுவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், தனியாருக்கு அரங்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்