Breaking News

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை -ஆளுநரின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அட்மின் மீடியா
0

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய விசாரணைக் கைதிகளை விடுவிக்க பரிந்துரைக்கும் அரசின் கோப்பு, ஆளுநரின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை கொட்டிவாக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவளவிழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டம் உடனடியாக நிறைவேறும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை சட்டம் உடனே நிறைவேறும், ஏழை மாணவர்கள் மருத்துவ கனவை கலைக்கும் நீட் தேர்வு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவார்கள், இந்தியை திணிப்பார்கள் ஆனால், 

உயிர்கள் பலியாகும் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற மறுப்பார்கள். இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான் முற்றுப்புள்ளியாக அமையும், அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கூறிய முதல்வர்

இந்த மாநாட்டில் சில கோரிக்கை தீர்மானங்கள் வைத்துள்ளீர்கள். இந்த தீர்மானங்களை முன்வைக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதை செய்து தரும் கடமை எனக்கும் உள்ளது. அதை மறக்கவும் மாட்டேன். மறுக்கவும் மாட்டேன்.

நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். 

இதற்காக, தி.மு.க. ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரை அரசிடம் வழங்கப்பட்டு உள்ளது. நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய விசாரணைக் கைதிகளை விடுவிக்க பரிந்துரைக்கும் அரசின் கோப்பு விரைவில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback