Breaking News

இஸ்லாமிய மதவெறியன் ஹிந்து கோவில் பூசாரியை அடிக்கும் வீடியோ எனபரவும் செய்தி உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஒரு இஸ்லாமிய மதவெறியன் ஹிந்து கோவில் பூசாரியை அடிக்கும் வீடியோ இதை எல்லா குழுக்களுக்கும் பகிரவும் குற்றவாளியை கைது செய்ய அடையாளம் காண இந்த வீடியோவை தயவுசெய்து பகிருங்கள் ஹிந்துசொந்தங்களே 🙏🏻🙏🏻🙏🏻என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ 4.11.2020 ம் ஆண்டு ஹரியானாவில் உள்ள தாபிகலன் என்ற பகுதியில் நடந்தது எனவும் அதில் உள்ளவர்கள் இந்து முஸ்லீம் கிடையாது எனவும் அடிப்பவர் அடிவாங்குபவர் இந்துக்கள் என்று அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள நிலைதகவலில் கிரிக்கெட் பேட் கொண்டு அடிப்பவர் முஸ்லீம் என்றும் அடிவாங்குபவர் இந்து என்றும் அவர் கோயில் பூசாரி என்று ஷேர் செய்கின்றார்கள்

பலரும் உண்மை தெரியாமல் எங்கு நடந்தது, எப்போது நடந்தது , எதற்க்காக நடந்தது, ஷேர் செய்யும் செய்தி உண்மை தானா, என தெரியாமல் எனக்கு வந்தது நான் ஷேர் செய்கின்றேன் என ஷேர் செய்துவிடுகின்றார்கள்

அப்படி ஷேர் செய்யும் பொய்யான செய்தி தான் இது  இந்த செய்தி குறித்து நாம் தேடுகையில் https://falanadikhana.com/pujari-beaten-up-in-haryana-by-goons-over-a-trivial-issue/ என்ற தளத்தில் 

அடிவாங்கும் பூசாரி பணிபுரியும் கோயிலில் இருக்கிம் காலி இடத்தில் அந்த ஊர் இளைஞர்கள் சென்று கிரிக்கெட் விளையாடுவார்கள் அதனை கண்டித்துள்ளார் பூசாரி, மேலும் பால் பேட், ஸ்டம்ப் போன்றவற்றை எடுத்து கொண்டு தராததால் இதற்கு பழிவாங்கும் வகையில், பூசாரியை கடத்திச் சென்று, இளைஞர்கள் இவ்வாறு தாக்கியுள்ளனர் என்று செய்து வெளியிட்டுள்ளது மேலும் அந்த வீடியோ அப்போதே வைரல் ஆகியுள்ளது, அது சமயம்  போலீசார், குறிப்பிட்ட இளைஞர்கள் அப்போதே கைது செய்துள்ளார்கள் எனவும்
அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று செய்தி வெளியிட்டு இருந்தது


முடிவு:-

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://falanadikhana.com/pujari-beaten-up-in-haryana-by-goons-over-a-trivial-issue/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback