Breaking News

கல்லூரி மாடியில் ரீல்ஸ் செய்த இளைஞர் தவறி விழுந்து மரணம் கடைசி வீடியோ bilaspur reels video

அட்மின் மீடியா
0

கல்லூரி மாடியில் ரீல்ஸ் செய்த இளைஞர்..! தவறி விழுந்து மரணம்..! கடைசி வீடியோ bilaspur reels video

 

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள கல்லூரியின் மேற்கூரையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த 20 வயது மாணவர் கீழே விழுந்து உயிரிழந்தார். 

அவரது கடைசி நிமிடங்களின் வீடியோ அவரது நண்பரின் மொபைல் போனில் படம்பிடிக்கப்பட்டது அந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் சிலர் அந்த கல்லூரி கட்டிடத்தின் மாடியில் இன்ஸ்டா வீடியோ ரீல் தயாரித்து கொண்டிருந்தார். அப்போது ​​அவரது கால் தவறி  20 அடி உயர கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

தகவலறிந்து வந்த போலீசார் விசாரனையில் இறந்த அந்த கல்லூரி நபர் ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள சர்கோவில் வசிக்கும் அசுதோஷ் சா (20), என்றும் அவர் அந்த கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்றும் நேற்று வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு படிக்கச் சென்றவர் கல்லூரி முடிந்து நண்பர்களுடன் கல்லூரி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்ற நண்பர்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அசுதோஷின் கால் நழுவி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்த நண்பர்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு டாக்டர்கள் அசுதோஷ் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/anshuman_sunona/status/1636762273833439232/video/1

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback