Breaking News

வெளிநாட்டு வழக்கறிஞர்கள், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கு பார் கவுன்சில் அனுமதி Bar Council allows foreign lawyers practise in India

அட்மின் மீடியா
0

வெளிநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள் நம் நாட்டில் சட்டப் பணிகளை மேற்கொள்ள இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


வெளிநாட்டு வழக்கறிஞர்கள் பல்வேறு சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்ற அமர்வின் தீர்ப்புகள் குறித்த விஷயங்களை இந்தியாவில் குறிப்பிட்ட தொழில் துறைகளில் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இது இரு நமது நாட்டு சட்டதிட்டங்களோடு பரஸ்பர அடிப்படையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான இந்திய பார் கவுன்சில் விதிகளை அறிவித்துள்ளது. 

வெளிநாட்டை சேர்ந்த வழக்கறிஞர், சட்ட நிறுவனம் கண்டிப்பாக பார் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் பதிவு செய்திருக்க வேண்டும். 

பார் கவுன்சில் ஆப் இந்தியாவில் பதிவு செய்யாத வெளிநாட்டு வழக்கறிஞர், சட்ட நிறுவனம் இந்தியாவில் சட்டப் பணிகள் செய்ய முடியாது.

இந்தியாவில் சட்ட பணிகள் செய்ய வெளிநாட்டு வழக்கறிஞர்கள் $25,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் $50,000 கட்டணம் செலுத்த வேண்டும்.  ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

இவர்கள் இங்கு அலுவலகம் திறக்க முடியாது. ஆண்டுக்கு 60 நாட்கள் மட்டுமே இந்த பணியை அவர்கள் மேற்கொள்ள முடியும்.

பதிவு பெற விரும்பும் வழக்கறிஞர்கள், மத்திய அரசின் சட்ட அமைச்சகம், வெளியுறவு மற்றும் வர்த்தக துறையிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்

சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் இந்தியாவில் சட்ட பணிகளை மேற்கொள்ள தகுதியானவர் என்பதை, அவர் சார்ந்த நாடு, வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சட்ட அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

வெளிநாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நீதிமன்றம், தீர்ப்பாயம் உள்ளிட்டவைகளில் நேரடியாக ஆஜராக முடியாது. இவற்றில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்க மட்டும் அனுமதி 

பல்வேறு சர்வதேச சட்ட சிக்கல்கள், மற்றும் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு குறித்த வழக்குகள் ஆகியவை இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களின் நலன், இந்தியாவில் சட்ட தொழில் ஆகியவை வளர இந்த உத்தரவு உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback