காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 8 பேர் பலி பலர் படு காயம்…
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 8 பேர் பலிஆகியுள்ளார்கள்
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில், 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றார்கள் இன்று காலை பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கோர வெடி விபத்தில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பட்டாசு ஆலையில் மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்