Breaking News

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!!

அட்மின் மீடியா
0

சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அதன்படி இந்த மாதம் 

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் ரூ. 2,268க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் ரூ. 2,268க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback