Breaking News

ரமலான் நோன்பை முன்னிட்டு முஸ்லீம் அரசு ஊழியர்கள் 1 மணிநேரம் முன்னதாக செல்ல பீகார் அரசு அனுமதி

அட்மின் மீடியா
0
ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு பணிநேரம் மாற்றம் - பீகார் அரசு அறிவிப்பு


முஸ்லீம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ரமலான் நோன்பை முன்னிட்டு  ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்திற்கு வரவும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேறவும் பீகார் அரசு அனுமதி அளித்துள்ளது. 


மாநில பொது நிர்வாகத் துறை இது தொடர்பான வெளியிட்ட சுற்றறிக்கையில்:-


முஸ்லிம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரம்ஜான் மாதத்தில் திட்டமிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்திற்கு வரவும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேறவும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது" ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இந்த உத்தரவு நிரந்தரமாக அமலுக்கு வரும் என்றும்  அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, முஹம்மது நபிக்கு குர்ஆன் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ரம்ஜான் நோன்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.இந்த மாதத்தில் 30 நாட்கள் கடுமையான நோன்பு இருப்பார்கள் தண்ணீரைகூட உட்கொள்ள மாட்டார்கள். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback