Breaking News

பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

அட்மின் மீடியா
0

பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. கல்யாணராமனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில்சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து அவர்மீதான வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தின் போதே 163 நாட்களையும் சிறையில் கழித்துவிட்டதால் அவரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Give Us Your Feedback