Breaking News

UPI மூலம் 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் கட்டணம்? | முழு விவரம் UPI transactions Rs 2,000 charge

அட்மின் மீடியா
0

வணிக ரீதியாக 2000 ரூபாய்க்கு மேல் கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ சேவை மூலம் பணம் அனுப்பினால் கட்டணம்? | முழு விவரம்




இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே Google Pay, Phone Pay, Paytm, Amazon Pay போன்ற UPI app-க்களை பயன்படுத்தி வருகின்றனர். 

யூபிஜ என்றால் என்ன:- 

பண பரிவர்த்தனையில் வங்கியில் மட்டுமே வங்கி திறந்து இருக்கும் போது மட்டுமே தான் நாம் பணத்தை மற்றவர்களுக்கு செலான் மூலம் அனுப்ப முடிந்தது இந்நிலையில் வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் UPI ஆகும். 

யுபிஐ ல் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் பணத்தை செலுத்த முடியும். யுபிஐ ஏற்கனவே உள்ள IMPS எனும் தொழில்நுட்பத்தை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது. யுபிஐ மூலம் பணம் அனுப்ப இதுவரை எந்த வித கட்டணமும் கிடையாது இந்தியாவில் யுபிஐ சேவை வசதி 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

அதன்படி மொபைலில் யுபிஐ வசதி மூலம் கட்டணமின்றி பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. UPI விரிவாக்கம்  Unified Payments Interface தமிழில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு ஆகும்



பணப்பரிவர்த்தனை செய்வதற்க்கான இந்த யூபிஜயை  NPCI (National Payments Corporation of India) எனும் அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. NPCI இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஆகும் 

யூபிஜ மூலம் தற்போது பணம் அனுப்ப  கூகுள் பே, பேடிஎம், போன் பே, அமேசான் பே, பாரத்பே, மற்றும் தற்போது அனைத்து வங்கிகளும் யூபிஜ வசதியை கொண்டு வந்துள்ளது மேலும் பெரும்பாலான மக்கள் அதிகளவில் இன்று யூபிஜயை பயன்படுத்தி வருகின்றனர்.நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது 

இந்நிலையில் இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள  ஒரு சுற்றறிக்கையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) வணிக பரிவர்த்தனைகளுக்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) கட்டணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. என தகவல்கள் வெளியாகி உள்ளது,  

அதாவது டிஜிட்டல் வாலட்டுகளில் இருந்து யுபிஐ மூலம் ரூ.2,000க்கு மேல் வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback