முதல் முறையாக டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி.! முமு விவரம்
டெல்லி உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 இடங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களையும் பாஜக 104 இடங்களையும் காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றின.
வழக்கமாக மாநகராட்சி மேயர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால் டெல்லியில் துணை நிலை ஆளுநர் நியமன கவுன்சிலர்களை நியமித்து அவர்களுக்கு மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருப்பதாகவும் அறிவித்துள்ளார்
இதனை தொடர்ந்து துணைநிலை ஆளுனர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களே வாக்களிக்க வேண்டும் நியமன கவுன்சிலருக்கு வாக்குரிமை கிடையாது என்று தீர்ப்பு வந்ததை அடுத்து இன்று டெல்லி மேயர் தேர்தல் நடைபெற்றது.
அதில், அதிக உறுப்பினர்களை கொண்ட ஆம் ஆத்மி வேட்பாளர் ஷைலி ஓபராய் பாஜகவின் ரேகா குப்தாவை தோற்கடித்தார். இதன் மூலம் முதன் முறையாக டெல்லி மாமன்ற மேயர் பதவியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்