Breaking News

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்

அட்மின் மீடியா
0
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) தேனி பெரியகுளத்தில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் பழனியம்மாள்


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக் குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்


தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் வசித்துவந்தார் பழனியம்மாள். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக அவரின் உடல்நிலை மோசமாகி வந்தது. நேற்றுமுன்தினம் தனது தாயாரை பார்க்க பன்னீர்செல்வம் பெரியகுளம் சென்றார்.

நேற்று அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். இந்நிலையில்தான் தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

தாயின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் விரைந்துள்ளார். பெரியகுளத்தில் இறுதி சடங்கு நடக்கவுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback