Breaking News

இனி கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெறலாம் - தமிழக அரசு

அட்மின் மீடியா
0

கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்புககளை 12மீ.உயரம் உள்ள 3 குடியிருப்பு, 8,070 சதுர அடி பரப்பளவிற்கு உட்பட்ட வீடுகளுக்கு தரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டட விதிகள் 2019, விதி எண் 20ன் படி கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்று இன்றி மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி உள்ளிட்ட முதலான இணைப்புகளை வழங்கலாம் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதற்கு முன்னதாகவே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை வழங்கலாம் என நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் (8070 சதுர அடி) பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும், இதுபோன்று அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த வசதியை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback