Breaking News

90 கண்டெய்னர்களுடன் காணாமல் போன ரயில் என பரவும் செய்தி உண்மை என்ன Mumbai goods train missing

அட்மின் மீடியா
0

நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் காணாமல் போனதாக தகவல் பல ஊடகங்களில் வெளியானது.



அதில் பிப்ரவரி 1ம் தேதி நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட PJT1040201 எண் கொண்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பொருட்களை நிரப்பிய கண்டெய்னர்களை கொண்ட ரயிலை காணவில்லை. இந்த ரயிலில் ஏற்றுமதிக்கு தரமான அரிசி, பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனம் உள்ளிட்ட பல கோடி மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 

பிப்ரவரி 1 அன்று PJT1040201 என்ற எண் கொண்ட சரக்கு ரயில் டிப்போவில் (ICD) இருந்து புறப்பட்ட ரயில், ஐந்து நாட்களில் JNPT-யை அடைந்திருக்க வேண்டும்.  ஆனால் தற்போதுவரை சென்று சேரவில்லை, மேலும் இந்த ரயில் கடைசியாக நாசிக் மற்றும் கல்யாண் இடையே கசரா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒம்பர்மலி ரயில் நிலையத்தை கடந்ததாகக் கூறப்படுகிறதுஎன பல செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டது


இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கம்:-

காணாமல் போனதாக செய்தி வெளிவந்துள்ள  சரக்கு ரயில் பிப்ரவரி 1ம் தேதி நாக்பூர் மிஹான் ஐசிடியில் இருந்து 90 கண்டெய்னர்களுடன் மும்பைக்குச் சென்ற சரக்கு ரயில் பிப்ரவரி, 5ம் தேதி புசாவலில் உள்ள ஷெகான் நிலையத்தை அடைந்தது.உண்மைத் தன்மையை சரிபார்த்த பிறகு செய்தியை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ரயில் காணாமல் போனதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல. தவறானச் செய்தி அளித்த நிருபர் மீது விசாரணை நடத்தப்படும்.

மேலும் ரயில் காணவில்லை எனத் தவறானச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், ரயில்வே அதிகாரிகள் யாரும் இத்தகைய தகவலை அளிக்கவில்லை என்று கூறியுள்ளது





Regarding the above matter, it is clarified that the said news is factually incorrect. In this regard, it is clarified that the said rake carrying 90 containers from Nagpur to Mumbai left MIHAN ICD on February 1st, 2023 and reached Shegaon Station of Bhusaval division on 5.2.2023. The rake is NOT MISSING as mentioned in the news article and it is being physically moved to the destination i.e. JNPT Port. 

The wrong information which is provided to the reporter will be investigated. It is requested to publish the above explanation in your popular edition for the proper information of the readers. In order to give correct information to the readers, we request you to always publish any railway related news only after understanding and getting statement from authorized Railway person.


ரயில்வே நிர்வாகம் அளித்த விளக்கம் :-

https://twitter.com/Central_Railway/status/1625546150051995651

 

Tags: FACT CHECK இந்திய செய்திகள் மறுப்பு செய்தி

Give Us Your Feedback