Breaking News

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45,000-ஐ தாண்டியது.! முற்றிலும் உருக்குலைந்து உள்ள துருக்கி ட்ரோன் வீடியோ

அட்மின் மீடியா
0

துருக்கி, மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 45,000-ஜக் கடந்து செல்கின்றது.

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தில் துருக்கி - சிரியா எல்லை அருகே பிப்ரவரி  ம்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. 

நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதை அடுத்து அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

தென்கிழக்கு துருக்கியின் காலியென்டெப் பகுதியில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன, இதனால் மக்கள் எல்லாரும் கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் இறங்கியுள்ளனர்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. 

மேலும் துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்களை எல்லாம் தரையோடு தரைமட்டம் ஆக்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

மேலும் இந்த இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோரை மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். பல சர்வதேச நாடுகளும் தங்களது மீட்புக்குழுவை உதவிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த இடிபாடுகளில் இன்னும் நிறைய பேர் சிக்கியிருக்கலாம்,  இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 33,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

எங்கு பார்த்தாலும் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கிறது. இந்த கட்டிடக் குவியல்களிடையே உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/EagleSenthil/status/1626107475824107520

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback