Breaking News

பெற்றோர்களே எச்சரிக்கை 4 வயது குழந்தையை கடித்து கொன்ற தெரு நாய்கள்- நெஞ்சை பதவைக்கும் சிசிடிவி வீடியோ 4 year old boy was killed today by stray dogs in Hyderabad

அட்மின் மீடியா
0

ஹைதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் நான்கு வயது குழந்தையை தெருநாய்கள் துரத்தி கடித்து கொன்றுள்ளன.நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஐதராபாத்தில் 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறி கொன்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள இந்தல்வாய் மண்டலத்தை சேர்ந்தவர் கங்காதர், தனது மனைவி, 6 வயது மகள், பிரதீப் என்ற 4 வயது மகனுடன் ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டைக்கு வந்து வசித்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 19ம் தேதி அந்த பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்ற கங்காதரின் 4 வயது மகனை, சில தெருநாய்கள்  சுற்றி வளைத்து கடித்து குதறின. சிறுவன் நாய்களிடம் இருந்து தப்பிக்க போராடி பார்த்தான்.இருந்தும் 3 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு சிறுவனை விடாமல் கடித்து குதறி விட்டது. நாய்கள் கடித்ததில் கதறியபடி சிறுவன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/porinju/status/1627912438376181761

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback