Breaking News

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவியகாற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

இதனால் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,சிவகங்கை, தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,குமரி ,நெல்லை , தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback