Breaking News

கனமழை காரணமாக இன்று 02.02.2023 பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக இன்று 02.02.2023 பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

 


 

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நீடிக்கிறது.இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, ஜன.,30ம் தேதி மாறியது தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து, வரும் பிப்.,1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும்.

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது இதனால்

பிப்ரவரி 02 ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 



என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 02.02.2023 கீழ் உள்ள மாவட்ட பள்ளிகல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  

குறிப்பு:-   

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback