Breaking News

நடைமுறைக்கு வந்தது- உம்ரா, சுற்றுலா செல்ல டிக்கெட் இருந்தாலே போதும் விசா தேவையில்லை விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் Saudi airline announces 96 hour visa with flight ticket

அட்மின் மீடியா
0

உம்ரா, சுற்றுலா செல்ல டிக்கெட் இருந்தாலே போதும் விசா தேவையில்லை 

 


 

சவுதி ஏர்லைன்ஸின் உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா  என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் சவுதியில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) சவூதியில் இருக்க  அனுமதிக்கும். 

இந்த 4 நாட்களில் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம் மற்றும் உம்ரா செய்யலாம்.சுற்றுலா மற்றும் உம்ரா யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு இந்த புதிய சேவை பெரும் பயனளிக்கும் என கூறப்படுகின்றது

புதிய நடைமுறையின் படி:-

சவுதி ஏர்லைன்ஸின் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில் பயணிகள் விமான டிக்கெட்  புக் செய்யும் போது விசா தேவையா என்ற கேள்வியும் இருக்கும். விசா தேவைப்படுபவர்கள் ஆம் என்பதை செலக்ட் செய்தால் போதும் விமான டிக்கெட்டுடன் விசாவும் சேர்ந்து வந்து விடும்,

உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா என்ற இந்த புதிய வகையான விசாவைப் பயன்படுத்தி, ஜித்தா விமான நிலையம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும்நீங்கள் இறங்கலாம். பயணத்தை முடித்துக் கொண்டு உங்களுக்கு வசதியான விமான நிலையத்திலிருந்தும் தாயகம் திரும்பலாம்.

மேலும் சவுதி விமான நிலையம் வழியாக பிற நாடுகளுக்கு செல்லும் போக்குவரத்து பயணிகளும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.  

இந்த விசா இலவசமானது, பயணிகளின் டிக்கெட்டுடன் இணைந்திருக்கும். பயணி, சவுதியில் நான்கு நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும் இந்த அனுமதி, வழங்கப்பட்டதில் இருந்து அடுத்த மூன்று மாத செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

எப்படி விண்ணப்பிப்பது:-

சவுதியா மற்றும் ஃப்ளைனாஸ் விமானங்களுக்கான ஆன்லைன் டிக்கெட் பெறும்போதே விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், சில நிமிடங்களில் விசா மின்னஞ்சலில் அனுப்பப்படும். 

நாட்டிலுள்ள எந்த விமான நிலையத்திலிருந்தும் வருவதற்கும் புறப்படுவதற்கும் அனுமதி உண்டு

விமான டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு இலவசமாக டிரான்சிட் விசா அளிக்கப்பட்டு அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு (அல்லது 96 மணிநேரம்) நாட்டிற்குள் தங்க அனுமதிக்கின்றது

NEWS SOURCE:-

https://twitter.com/Saudi_Gazette/status/1620418439813926915

Saudi airline announces 96 hour visa with flight ticket

Saudi Arabia to launch visa-free entry ticket for 4 days


Saudi Arabia Launches E-transit Visa

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback