Breaking News

பெண்கள் ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் முழு விவரம் Rs.1 lakh subsidy for women auto drivers

அட்மின் மீடியா
0

தமிழக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்நர்களுக்கு சொந்தமான ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது

 


சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,

தமிழக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்நர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவித்தொகை ரூ. 1,000-லிருந்து ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

Rs.1 lakh subsidy each for 500 women auto drivers

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback