Breaking News

புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற மாதிரி புகைப்படங்கள் new parliament building india

அட்மின் மீடியா
0

இந்திய நாடாளுமன்றத்திற்க்கு புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த புதிய நாடாளுமன்றம் மார்ச் மாதம் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


நான்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் 1,200 பேருக்கு மேல் அமரும் வசதியுடன் இருக்கும். கட்டிடத்தில் சட்டமன்றத்திற்கான பெரிய அறைகள் இருக்கும். மேலும் இதில் நாடாளுமன்ற மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 324 இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது. தற்போது மக்களவையில் 543 பேரும், மாநிலங்களவையில் 245 பேரும்தான் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் வரும் நாட்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் மக்களவை, மாநிலங்களவைகளுடன் எம்பிக்களுக்கான ஓய்வு அறை, பெரிய நூலகம், நாடாளுமன்ற குழுவினருக்கான அறைகள், உணவருந்தும் பகுதிகள், வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. 

முக்கோண வடிவில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில்  தற்போது புதிய நாடாளுமன்றத்தின் படங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 




new parliament building

new parliament house

new indian parliament building

new parliament building interior

new parliament of india

new parliament building design

new parliament building built by india

new parliament design

new parliament building construction

new parliament building india design

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback