Breaking News

கோயிலுக்கு சென்ற பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம், அதிரடி கைது ... வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கோயிலுக்கு சென்ற பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம், அதிரடி கைது ... வைரல் வீடியோ




சேலம் அருகே உள்ள திருமலைக்கிரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார். பட்டியலினத்தை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கிராமத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றுள்ளார்,அப்போது அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திரும்பி வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27-ம் தேதி கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இந்த காட்சிகளை அங்கு இருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கிய நிலையில் மாணிக்கத்தை திமுக தலைமை  கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது. 

இது குறித்து திமுக பொது செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் டி.மாணிக்கம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்.மேலும் பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில், இரும்பாலை காவல் நிலைய போலீஸார் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கைது செய்துள்ளார்கள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback