Breaking News

ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.! வைரல் புகைப்படம்

அட்மின் மீடியா
0

தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஹிஜாப் அணிந்துகொண்டு மசூதிக்கு சென்ற படங்கள் சமூக வலைதளங்களில்வைரலாக பரவி வருகிறது.



திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றிருந்தார். அங்கு துபாய், ஷார்ஜா உள்ளிட்ட இடங்களில் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில் பங்கேற்ற அவர் குடியரசுத் தினத்தை துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாடினார். 


ஓமன் நாட்டின் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் மசூதிக்கு  சென்ற தமிழச்சி தங்கபாண்டியன் அங்கு ஹிஜாப் அணிந்து சென்றுள்ளார், மேலும்  மசூதியில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ளார்




Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback