திருப்பூரில் தமிழக வடமாநில தொழிலாளர்கள் மோதல் பீகார் இளைஞர்கள் 2 பேர் கைது
திருப்பூரில் தமிழக வடமாநில தொழிலாளர்கள் மோதல் பீகார் இளைஞர்கள் 2 பேர் கைது
திருப்பூர் மாநகர காவல் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில்
திருப்பூர் மாநகரம், வடக்கு மாவட்டம், 15 வேலம்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட திலகர் நகரில் உள்ள ரியா பேஷன்ஸ் என்ற கம்பெனி அருகில் 14.01.2023 அன்று மாலை நடந்த சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் ஏற்கனவே பத்திரிக்கை செய்தி 27.01.2023ம் தேதி கொடுக்கப்பட்டது.
இது சம்பந்தமாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இசம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை (ரஜத்குமார்-24, த/பெ.அமரேந்திரா மற்றும் பரேஷ்ராம்-27, த/பெ.ராம்துளர்) இன்று 30.01.2023 கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தனிப்படையினர் தேடிவருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்சாப் குழுக்களில் தவறான பதிவுகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்