Breaking News

தமிழ்நாட்டில் நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு முழு விவரம் Private milk price

அட்மின் மீடியா
0

தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, சீனிவாசா ஆகியவை பால்,தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

 



இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (20-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூபாய் 50ல் இருந்து ரூபாய் 52 ஆக உயர்த்தபட்டுள்ளது. 

இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் ரூபாய் 48ல் இருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தபட்டுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட பால் ரூபாய் 62ல் இருந்து ரூபாய் 64 ஆக உயர்த்தபட்டுள்ளது. 

நிறை கொழுப்பு பால் ரூபாய் 70ல் இருந்து ரூபாய் 72 ஆக உயர்த்தபட்டுள்ளது. 

தயிர் பாக்கெட்டுகளின் விலை ரூபாய் 72ல் இருந்து 74 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமி அவர்கள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக, உடனடியாக தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback