Breaking News

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி… உடனே விண்ணப்பிங்க! free Agricultural Drone Training

அட்மின் மீடியா
0

வேளாண் துறையில் டிரோன் பயன்பாடு தொடர்பான பயிற்சியை தாட்கோ நிறுவனம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து இலவசமாக பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த பயிற்சி வழங்குகின்றது.


தகுதிகள்:-

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள்/ பெண்கள்/ திருநங்கைகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி:-

குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதிக்கு மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி :-

10 நாட்கள் ட்ரோன் திறன் பயிற்சி வழங்கப்படும். 

சிறப்பம்சங்கள்:-

பயிற்சி கட்டணம் ரூ. 61,100 முழுவதையும் தமிழக அரசின் தாட்கோ ஏற்கும். 

பயிற்சி நாட்களில் தங்குவதற்கான வசதி செய்து தரப்படும்.

பயிற்சி காலத்திற்குப் பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மூலம் ட்ரோன் இயக்குவதற்கான 10 ஆண்டு  உரிமம்

பயிற்சியை முடித்தவர்கள், சொந்தமாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவோ ட்ரோன்கள் வாங்க தாட்கோ உதவி செய்யும். 

விண்ணப்பிக்க:-

http://iei.tahdco.com/drone_reg.php





Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback