Breaking News

அமீரகம் நிலவிற்க்கு விண்கலம் அனுப்பி சாதனை UAE built Rashid Rover successfully

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சந்திர விண்கலம் ஜப்பானின் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம் சந்திரனுக்கு நேற்று ஏவப்பட்டது. 

துபாயின் முன்னாள் ஆட்சியாளர் மறைந்த ஷேக் ரஷீத் அல் சயீத்தின் நினைவாக ராஷித் ரோவர் என பெயரிடப்பட்ட இந்த சந்திர விண்கலம் துபாயில் உள்ள முகமது பின் ரஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டது. 

இந்த விண்கலம் ஏப்ரல் மாதம் நிலவில் தரையிறங்க உள்ளது. விண்கலம் நிலவின் இரவை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த எரிபொருள் செலவில் அதிக மாதிரிகளை சேகரிக்கும் வகையில் கூடுதல் இடவசதியுடன் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback