வங்ககடலில் உருவாகும் புதிய புயலுக்கு பெயர் வைத்த அமீரகம் mandous cyclone
வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். இதனால் 3 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் பெயர் வைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் 7ம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டிசம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்