Breaking News

பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு mandous cyclone bus service

அட்மின் மீடியா
0

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, "மாண்டஸ் புயல்" பேருந்துகள் இயக்கம் தொடர்பான, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சா. சி. சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

மேலும், அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள், உயர் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தொடர்பில் இருந்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி. சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback