ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி | வைரல் வீடியோ Girl student who got stuck between train & platform
விசாகப்பட்டினம் அருகே ரயிலில் இருந்து இறங்கும்போது, தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி வைரல் வீடியோ
அதன்படி நேற்று முந்தினம் சகிகலா கல்லூரிக்கு செல்வதற்காக குண்டூர் - ராயகடா விரைவு ரயிலில் ஏறி துவ்வாடா ரயில் நிறுத்தத்தில் நிற்பதற்குள் சகிகலா இறங்க அப்போது கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் விழுந்து சிக்கிக் கொண்டார்
உடனே ரயில்வே மீட்பு படையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் மாணவியை வெளியே எடுக்க முடியவில்லை. கடைசியாக நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து சுமார் 1.30 மணிநேரம் போராடி கல்லூரி மாணவி சசிகலாவை பத்திரமாக மீட்டனர்.
இதனையடுத்து இடுப்பில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சசிகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒன்றரை மணி நேரமாக போராடி மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும், உள் உறுப்புகள் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே ரயில் நிற்பதற்க்கு முன்பு இறங்க முயற்ச்சிக்காதீர்கள் ரயில் நின்றவுடன் இறங்குங்கள் என அட்மின் மீடியா சார்பாக தெரிவித்துகொள்கின்றோம்
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ