Breaking News

திருமா பயிலகத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்புகள் உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் Free Coaching Class for TNPSC

அட்மின் மீடியா
0

திருமா பயிலகத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி  இலவச பயிற்சி வகுப்புகள் உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம்

வேலைவாய்ப்பிற்க்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்திவரும் திருமா பயிலரங்கம் வரும் சனிக்கிழமை முதல் டி.என்.பி.எஸ்.சி பயிற்ச்சி வகுப்புகள் தொடங்குகிறார்  அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


திருமா பயிலகத்தின் சார்பில் தொல்.திருமாவளவன் அறிக்கை

சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் 'திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். 

இப்பயிலகத்தில் பயிற்சி பெற்ற பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 03.12.2022 (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு TNPSC- CCSE- Gr(II-Mains) தேர்விற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. 

மேலும், பயிற்சி வகுப்புகள் தேர்வு மற்றும் கலந்துரையாடல் (TEST and Discussion) முறையில் நடைபெற இருக்கிறது. தொலைதூர போட்டியாளர்கள் பயனுறும் வகையில் இணையவழி பயிற்சி வகுப்புகளும் நடைபெற இருக்கிறது.

இப்பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுத்தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர். கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:-

8610392275, 

9042991182

மின் அஞ்சல்:-

thirumapayilagam@gmail.com



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback